யாழ் நீர்வேலியில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம், நீர்வேலியில்  வீடு ஒன்றினுள் புகுந்த குழுவினர்  சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

சம்பவத்தில் சிவா (வயது -30) அவரது தாயார் ரேணுகா (வயது -50) ஆகிய இருவர் மீதே வீடு புகுந்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவம் நேற்று  இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அடங்கிய கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

வன்முறைக் கும்பல் வாள்கள், கம்பிகள் கொண்டே தாக்குதலை நடத்தியுள்ளது. வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியும் தீயிட்டு எரித்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு வன்முறைக் கும்பல் தப்பித்துள்ளது.

Related posts