வவுனியாவில் திடீர் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர்!

வவுனியாவில் நேற்று நள்ளிரவு முதல் வீதிகளில் திடீர் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் மிகுந்த அச்ச உணர்வுடன் காணப்படுகின்றனர்.

இன்று அதிகாலை 12.30 மணியிலிருந்து இராணுவத்தினர் வவுனியா நகர் பகுதியில் ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டதாகவும் தெரியவருகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை வழிமறித்தும் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களிலே ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரியவருகின்றது.

Related posts