யாழில் காரை விற்க முற்பட்ட இருவர் துரத்தி பிடிப்பு!

கொழும்பிலிருந்து போலி ஆவண புத்தகத்தின் ஊடாக கார் ஒன்றை விற்பனை செய்வதற்காக நெல்லியடி நகரப்பகுதியில் விலை பேசிக்கொண்டு நிற்கும் பொழுது நெல்லியடி பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டார்கள் என தெரியவந்துள்ளது.

பொலிசார் விசாரிக்க முற்படுகையில் வாகன சாரதியும் கூட வந்தவரும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடி குஞ்சர் கடைக்கு அருகாமையிலிருந்த பொது மண்டபம் ஒன்றில் நிகழ்வு நடந்து கொண்டிருந்த பொழுது அந்த நிகழ்வு மண்டபத்தில் ஒளிந்திருந்த நிலையில் பொலிசாரால் துரத்திபிடிக்கப்பட்டனர்.

இருவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்றும் வாகனம் ஓடி வந்தவர் 38 வயது உடையவர் என்றும் வாகனத்தைக் கொண்டு வந்த உரிமையாளரின் வயது 48 என்றும் தெரியவருகிறது.

இதனை 38 லட்சத்துக்கு விலை பேசிக் கொண்டிருக்கும் பொழுது நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெயதிலக தலைமையிலான ஐபி சோம ஸ்ரீ ஆனந்த தலைமையில் சென்ற போலீசார் கைது செய்தார்கள்.

தற்போது விசாரணையின் பின் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

Related posts