பூரண ஹர்த்தால் : வெறிச்சோடியது யாழ்ப்பாணம்!

தமிழர்களின் உரிமை மறுப்பு மற்றும் நினைவேந்தல்களுக்கான தடை ஆகியவற்றை கண்டித்து தமிழ் கட்சிகளினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கமைய யாழ்.மாவட்டம் முடக்கப்பட்டிருக்கின்றது.

விசேடமாக யாழ்.நகரில் சகல வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது. இதேபோல் யாழ்.மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு, மக்கள் நடமாட்டமில்லாமல் காணப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts