தெற்கு லண்டனில் துப்பாக்கிச் சூடு : பொலிஸ் அதிகாரி பலி : இலங்கை இளைஞர் காயம்!

தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுட்டவர் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் என தெரியவருகிறது.

சந்தேகத்தின் பேரில் வீதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன், பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனையிட முற்பட்டவேளை துப்பாக்கி சூட்டுச் சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தன்னிடமிருந்து ஆயுதத்தை வழங்குவதற்கு முன் பொலிஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்ட இளைஞன் தன்னை தானே சுட்டுக்கொண்டுள்ளார்.

பின்னர் பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய 23 வயது இளைஞரைபொலிஸார் கைது செய்தனர்.

அவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.

பொலிஸ் அதிகாரி மறைவுக்கு பிரதமர் போரிஸ் ஜோன்சன் உட்பட பல இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து லண்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts