படையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கோலாகலமாக பொங்கல்!

வெடுக்குநாரி ஆதி இலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழாவின் இறுதிநாளான இன்று 108 பானைகள் வைத்து கோலகலமாக பொங்கல் விழா இடம்பெற்றது.

படையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கோலாகலமாக பொங்கல் விழா நடைபெற்றதாகத் தெரியவருகின்றது.

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதி இலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழா நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது நாட்கள் இடம்பெற்று நேற்று பத்தாம் நாள் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றது.

அந்தவகையில்  ஆலய வளாகத்தில் 108 பானைகளில் பொங்கல்பொங்கி விஷேட பூஜை நிகழ்வுகளுடன் கோலாகலமாக பொங்கல் விழா நிகழ்வுகள் இடம்பெற்றது.

காலை11 மணிக்கு ஆரம்பமாகிய பூஜை நிகழ்வுகளில் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் புவனேஸ்வரன்ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

Related posts