தேங்காயின் சுற்றளவை அடிப்படையாக வைத்து வி‍லை நிர்ணயம்!

தேங்காயின் சுற்றளவை அடிப்படையாக வைத்து, அதன் விலையை நிர்ணயிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், 12 அங்குலத்தை விட குறைந்த சுற்றளவை உடைய தேங்காயின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 60 ரூபாவாக இருக்கும். 12 அங்குலத்திற்கும் 13 அங்குலத்திற்கும் இடைப்பட்ட சுற்றளவை உடைய தேங்காயின் குறைந்த பட்ச விலையை 65 ரூபாவெனவும், 13 அங்குலத்தை விட கூடுதலான சுற்றளவை உடைய தேங்காயின் குறைந்த பட்ச விலையை 70 ரூபாவெனவும் நிர்ணயிப்பதென அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இவ்வாறு விலை நிர்ணயிப்பது சிரமமான காரியம் என வர்த்தகர்கள் ஆதங்கப்படுகிறார்கள். நுகர்வோரைப் பாதுகாத்து அவர்களுக்கு நீதி நிலைநாட்டவே இத்தகைய தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.

Related posts