யாழ். பல்கலை மாணவர்களுக்கு அச்சுறுத்தல்!

வெடுக்குகுநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பொங்கல் விழாவிற்குச் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்களை கொடிகாமத்தில் மறித்து அவர்களையும் அவர்களது உடைமைகளையும் பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

வெடுக்குகுநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பொங்கல் விழாவில் பங்குபற்றுவதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் பஸ்ஸில் நெடுங்கேணி நோக்கி பயணமானபோதே  பொலிஸார் இவ்வாறு நடந்துகொண்டனர்.

இடையில் கொடிகாமம் பகுதியில் வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பஸ்ஸை மறித்த பொலிஸார்  மாணவர்களையும் அவர்கள் பொங்கல் நிகழ்வுகளுக்காக கொண்டு சென்ற பொருட்களையும் சோதனையிட்டுள்ளனர்.மேலும் பல்கலைக்கழக மாணவர்களை தொலைபேசியில் வீடியோ எடுத்தும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்பட்டனர்.

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வெடுக்குநாறி ஆலயத்திற்கான பயணத்தில் மாணவர்கள் தொடர்ந்து சென்றனர்.

Related posts