யாழில் வாள்வெட்டு : ஒருவர் காயம்!

தனுரொக் வாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனுவின்  மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வாள்வெட்டில், படுகாயமடைந்த தனு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரில் வந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த தனுவை யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் வைத்து இன்று நண்பகல் வழிமறித்து துரத்தி அருகில் இருந்த தனியார் கல்வி நிலையத்தில் வைத்து வெட்டியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், சம்பவ இடத்தில் கார், வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

காரில் வைத்தியர் என்ற ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த கார் வைத்தியருடையது அல்ல என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts