பெண்ணிடம் கைவரிசை: இளைஞருக்கு தர்ம அடி!

யாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் வீதியால் சென்ற இளம் பெண்ணின் பணப்பையை பறித்துக்கொண்டு ஓடியவர் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதன் பின்னர் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளது. மேற்படி இளைஞன் யாழ். மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் எனவும், இவர் சுன்னாகம், மல்லாகம் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற பல வழிப்பறித் திருட்டுக்களுடன் தொடர்புடையவரெனவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts