உத்தரவுகளை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை!

மக்களின் பொது நலனுக்காக வழங்கப்படும் அனைத்து வாய்மொழி ரீதியிலான உத்தரவுகளையும் சுற்றறிக்கையாக கருதி செயற்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இவ் உத்தரவுகளை மீறுகின்ற அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பதுளை, ஹல்துமுல்லை, வெலங்விட்ட கிராமத்தில் இன்று (25) ஆரம்பிக்கப்பட்ட “ஜனாதிபதி கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்வின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அரச அதிகாரிகளிடமிருந்து நான் எதிர்பார்ப்பது மக்கள் பிரச்சினைகளை தெளிவாக புரிந்துகொண்டு தீர்வுகளை வழங்குவதே ஆகும். மக்களின் பக்கம் நின்று சரியான மற்றும் தைரியமாக முடிவெடுக்கக்கூடிய அதிகாரிகளை நான் பாதுகாப்பேன்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க அரச நிறுவனங்கள் நீண்டகாலத்தை எடுக்கின்றன. ஒரு நிறுவனத்திலிருந்து எழுத்துமூல விசாரணைக்கு இன்னுமொரு நிறுவனம் 14 நாட்களுக்குள் பதில் அளிக்காதவிடத்து அவ் எழுத்து மூல வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதாக கருதி மக்களுக்கு பதில் கூறவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

Related posts