உக்ரைனில் விமான விபத்தில் 22 பேர் பலி!

உக்ரைன் அரசாங்கத்தின் இராணுவத்தினருக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நகரம் ஒன்றில் தரையிறங்க முயன்ற போது குறித்த விமானம் விபத்துகன்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெறும் பொழுது விமானத்தில் 27 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 02 பேர் காயமடைந்துள்ள நிலையில் 03 பேர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts