அமைதியாக எலும்பை அழிக்கும் நோயின் அபாயத்தை அதிகரிப்பவை எவை?

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளுடன் தொடர்புடைய ஒரு நோய். இதனால் எலும்புகள் பலவீனமடைய ஆரம்பித்து, எலும்பு முறிவு ஏற்பட ஆரம்பிக்கும். பெரும்பாலும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் ஆண்களை விட பெண்களே அதிக ஆபத்தில் உள்ளனர். ஆண்களை விட பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் அதிகமாக இருப்பதற்கு ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பல குறிப்பிட்ட காரணங்கள் உள்ளன.

ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் மருத்துவ நிலையால் எலும்புகள் பலவீனமாகவும், அடர்த்தி குறைவு காரணமாக நுண்துகள்களாகவும் மாறும். இந்த எலும்பு நோய் உள்ளவர்களுக்கு எளிதில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனை இருந்தால் வெளிப்படையாக எந்த ஒரு அறிகுறிகளையும் உணர முடியாது. பொதுவாக இதன் முதல் அறிகுறி எளிதில் எலும்பு முறிவு ஏற்படுவது தான். இப்போது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தின் பின்னிருக்கும் சில முக்கிய காரணிகளைக் காண்போம். இந்த காரணிகளால் தான் ஒருவருக்கு ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுகிறது.

வயது

வயது என்பது படிப்படியாக அதிகரிக்கும் உடலின் இயற்கையான செயலாகும். பொதுவாக வயது அதிகரிக்கும் போது, வயதான எலும்புகளின் வயதான செல்கள் உடைகின்றன மற்றும் எலும்பின் புதிய செல்கள் உருவாகின்றன. இருப்பினும், ஒருவர் 30 வயதை அடைந்தவுடன், உடல் வேகமாக எலும்பை உடைக்கத் தொடங்குகிறது. இந்த வயதில் எலும்புகளால் அதை மட்டுமே செய்ய முடிகிறது. இதனால், 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எலும்பு முறிவு என்னும் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

பாலினம்

ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களால், இறுதி மாதவிடாய்க்கு பின் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது. அதிலும் 45-55 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு எலும்பு வலி மற்றும் எலும்பு முறிவிற்கான அபாயம் அதிகரிக்கிறது. இந்த வயதுடைய ஆண்களுக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படலாம். ஆனால் பெண்களுடன் ஒப்பிடும் போது குறைவு.

குடும்ப வரலாறு

உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் ஆஸ்டியோபோரோசிஸ் இருந்தால், அந்த நோய் உங்களுக்கும் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. இதற்கு மரபணுக்கள் காரணம் என்பதால், இதைத் தவிர்ப்பது இயலாத ஒன்று.

உணவு முறை

நீங்கள் உண்ணும் உணவுகளும் இதற்கு முக்கிய காரணம். சிலர் கால்சியம் குறைவான உணவுகளை உண்பர். அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. அதோடு, மிகவும் குறைவான உடல் எடையுடன் அல்லது ஒல்லியாக இருப்பவர்களுக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் இரைப்பைக் குடல் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கும் எலும்பு நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

மருந்துகள்

கார்டிகோஸ்டீராய்டுகளை நீண்ட காலமாக எடுப்பவர்களது உடலில் எலும்புகளை மீண்டும் கட்டமைக்கும் திறன் பாதிக்கப்படலாம். இதனால், கார்டிகோஸ்டீராய்டு எடுக்கும் நோயாளிகளுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. இரைப்பை ரிஃப்ளக்ஸ், புற்றுநோயைத் தடுக்க மற்றும் சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் மருந்துகள் ஆஸ்டியோபோரோசிஸை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கின்றன.

வாழ்க்கை முறை காரணிகள்

உங்களின் சில பழக்கவழக்கங்களும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கின்றன. அதில் சுறுசுறுப்பாக இல்லாமல் இருப்பது, உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை, அதிகளவு மது அருந்துவது, புகைப்பிடிப்பது, புகையிலை மற்றும் சீரான உணவை உண்ணாமல் இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆஸ்டியோபோரோசிஸை எவ்வாறு கண்டறிவது?

நோயாளியின் உடல் பரிசோதனையின் அடிப்படையில், ஆஸ்டியோபோரோசிஸ் இருப்பதாக கண்டறியப்பட்டால், இரத்த பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் எலும்பு இழப்பை ஏற்படுத்தக்கூடிய நிலைமைகளை சரிபார்க்கலாம். அதன் பின் எலும்பு அடர்த்தியை சோதிக்கலாம். இந்த சோதனை எலும்பின் ஒரு பிரிவில் உள்ள கால்சியத்தின் அளவை அளவிட உதவுகிறது. பிஎம்டி-யில் பொதுவாக சோதிக்கப்படும் எலும்புகள் பெரும்பாலும் இடுப்பு மற்றும் முதுகெலும்புகளாகும்.

ஆஸ்டியோபோரோசிஸிற்கான சிகிச்சை

எலும்பு முறிவை ஆஸ்டியோபோரோசிஸ் சிகிச்சையின் மூலம் தடுக்கலாம். இருப்பினும், மருத்துவர்கள் நோயாளியின் எலும்புகள் உடைவதைத் மெதுவாக்க சில மருந்துகளைப் பயன்படுத்த பரிந்துரைப்பார்கள். அதோடு, எலும்புகளை வலுவாக்க சில வாழ்க்கை முறை மாற்றங்களையும் மேற்கொள்ள அறிவுறுத்துவார்கள். * இந்த சிகிச்சையில் அன்றாட உடற்பயிற்சியுடன், கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட கூறுவார்கள். * எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி உணவுகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும், கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர் மற்றும் பச்சை இலைக் காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். * வைட்டமின் டி சத்து சூரிய ஒளியில் இருந்தும் கிடைக்கிறது. இது தவிர, வழக்கமான உடற்பயிற்சி, மன அழுத்த நிவாரண பயிற்சியான யோகா போன்றவற்றை மேற்கொள்வதுடன், மது அருந்துவதைக் குறைப்பதன் மூலம் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

Related posts