பாடும் நிலா மறைந்தது!

கொரோனா தொற்று காரணமாக சென்னை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி இன்று (25.09.2020) மதியம் 1.04 மணிக்கு உயிரிழந்தாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

அவர் கடந்த 51 நாட்களாக சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே எஸ்.பி. பாலசுப்ரமணியம் 74 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை எஸ்.பி. பாலசுப்ரமணியம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் 40,000 பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் தனது படைப்புகளுக்காக சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான ஆறு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.

தெலுங்கு சினிமாவை நோக்கிய அவரது படைப்புகளுக்கு 25 ஆந்திர மாநிலத்தின் நந்தி விருதுகள், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து பல மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.

Related posts