சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு!

இன்று முதல் பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில், பேருந்துகள், அலுவலக சேவை வாகனங்கள் மற்றும் பாடசாலை சேவை வாகனங்கள் மாத்திரம் பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

பேருந்து முன்னுரிமை வீதிகளில் குறித்த வாகங்களை தவிர்ந்த வேறு வாகனங்களை செலுத்த முடியாது.

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகள் வீதியின் இரண்டாவது ஒழுங்கையில் பயணிக்க வேண்டும்.

கொழும்பையும், அதனை அண்மித்த நகரங்களிலும், பிரதான 4 வீதிகளை மையமாக கொண்டு, காலை 6 மணி காலை 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், இந்த வீதி ஒழுங்கை சட்டம் கடந்த 14 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

ஹைலெவல் வீதியில் நுகேகொடை – அநுலா வித்தியாலயத்திற்கு அருகில் இருந்து பித்தலை சந்தி வரையும், பேஸ்லையின் வீதியில் களனி பாலம் முதல் ஹைலெவல் பேஸ்லையின் சந்தி வரையும், காலி வீதியில் வெள்ளவத்தை முதல் லிபர்ட்டி சுற்றுவட்டம் வரையிலும் வீதி ஒழுங்கை சட்டம் அமுலில் உள்ளது.

அண்மையில்  பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில்  மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகள் கட்டாயமாக பயணிக்கவேண்டும் அன்றில் அபராதமாக ரூபா 2000 தண்டபடப்பணம் அறவிடப்படும் என பொலிசார் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts