இன்றைய வானிலை!

சப்ரகமுவ, மேல், மத்திய, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழையுடனான கால நிலை நிலவக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் ஊவா மாகாணத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னரும் நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts