மேலும் 13 பேருக்கு கொரோனா!

கொவிட் 19  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3312 ஆக அதிகரித்துள்ளது.

கந்தக்காடு முகாமில் ஒருவருக்கும் குவைட் நாட்டிலிருந்து வருகை தந்த ஒருவருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த 7 பேருக்கும், சவுதி அரேபியாவிலிருந்து வருகை தந்த இருவருக்கும் இந்தியாவிலிருந்து வருகை தந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts