புதிய பாராளுமன்றத்தில் இன்று முதன்முறையாக கூடவுள்ள கோப் குழு!

புதிய பாராளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவான கோப் குழு இன்று முதன்முறையாக கூடவுள்ளது.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில், கோப் குழுவின் உறுப்பினர்களால் அதன் தலைவரை தெரிவு செய்வதற்கு எதிர்ப்பாக்கப்படுவதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அரச கணக்குகளுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவான கோபா குழு எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ளது.

அன்றைய தினம் அதன் தலைவரை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கோப் குழு மற்றும் கோபா குழுவில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர்.

பொது நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான பிற நிறுவனங்களின் நிதி செயல்திறனை கண்காணிப்பதற்கு கோப் குழுவிற்கு அதிகாரம் உள்ளது.

அதேநேரம், அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்களின் முகாமைத்துவ திறன் மற்றும் நிதி ஒழுக்கத்தை ஆராய்வது கோபா குழுவின் கடமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts