’தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கும் ’

ஏப்ரல் 21 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என,  கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னரே தான் அது தொடர்பில் கருத்து வெளியிட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இன்று (22) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts