சுவிஸில் கொரோனா பரவலை கணிக்க அதிகாரிகள் தவறியதாக விமர்சித்த மருத்துவர் ஒருவருக்கு அவரது மருத்துவமனையையே மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கொரோனா பெருந்தொற்று தொடர்பில் பெடரல் அரசாங்கம் வகுத்துள்ள கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சனிக்கிழமை சூரிச் பகுதியில் முக்கிய நபர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல மருத்துவர் ஆண்ட்ரியாஸ் ஹெய்ஸ்லர் தான் தற்போது தமது மருத்துவமனையையே மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அரசுக்கு எதிராகவும், கொரோனா பெருந்தொற்று தொடர்பில் இவர் வெளியிட்டுள்ள கருத்துகளும் விமர்சனங்களுக்கு இலக்காகியுள்ளது.
மட்டுமின்றி, இவரது மருத்துவமனையில் செயல்பட்டு வந்த ஊழியர்களும், இவரது கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவருக்கு பின் ஒருவராக ராஜினாமா செய்து வெளியேறியுள்ளனர்.
இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதுடன், தற்போது மருத்துவமனையையே மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தமது மருத்துவமனைக்கு புதிய ஊழியர்கள் கிடைத்துள்ளதாகவும், அக்டோபர் மாதம் முதல் மருத்துவமனை செயல்படும் எனவும் மருத்துவர் ஆண்ட்ரியாஸ் ஹெய்ஸ்லர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கொரோனா தொடர்பில் பெடரல் அரசாங்கம் இதுவரை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் விரோத போக்கு என்ற கருத்தில் தாம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.