கொரோனா எதிரொலி- பிரித்தானியாவில் 10 மணியுடன் உணவகங்களுக்கு பூட்டு!

இரண்டாவது கொரோனா அலைக்கு முகங்கொடுத்துள்ள பிரித்தானியா, தற்போது பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

அதன்படி, கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தை ஏற்படுத்தும் என அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் மதுபான சாலைகளை இரவு 10 மணிக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் முறையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிடின் அடுத்த மாதமளவில் அங்கு நாளாந்தம் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு பிரதான தொற்று நோயியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

Related posts