உங்களை டெங்கு தாக்கினால் கொரோனா தாக்குவதற்கான வாய்ப்பு குறைவு! ஆய்வில் தகவல்!

டெங்கு காய்ச்சலிலிருந்து குணமடைந்தவர்களுக்கு கொரோனா வைரஸின் பாதிப்பு குறைவாக  அவதானிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரேசில் நாட்டில் டெங்கு காய்ச்சலினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், டெங்கு காய்ச்சலினால் எற்கனவே பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் கொரோனா தொற்றுக்கு எதிராக தமது உடலில் எதிர்ப்பு திறனை கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் இப்பகுதிகளில் கொரோனா  தெற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் விகிதம் குறைவாக பதிவாகியுள்ளது.

இதனையடுத்து டெங்கு காய்ச்சலிலிருந்து குணமடைந்தவர்களின் நோய் எதிர்ப்பு திறன் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பலிப்பதாக ஆய்வாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை, டெங்கு தடுப்பூசியை கொரோனா வைரஸ் தொற்றாளருக்கு செலுத்துவதன்  மூலம் கொரோனா தொற்றுக்கு எதிராக ஓரளவு பாதுகாப்பு பெற முடியும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

எனினும், கொரோனா  தொற்றுக்குள்ளானவர்களின் உடல் நிலமை மற்றும் வயது இவ்விடயத்தில் தாக்கம் செலுத்தும் என தெரிவிக்கின்றனர்.

Related posts