நேற்று 764 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து மொத்தம் 764 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி கட்டார் டோஹாவிலிருந்து நேற்றிரவு 11.15 மணிக்கு 39 இலங்கையர்கள் கியூஆர் -668 என்ற விமானத்தில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

பின்னர் துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஈ.கே.-648 என்ற விமானத்தில் 413 இலங்கையர்கள் இன்று அதிகாலை 2.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதேபோல் ஜப்பானின் நரிட்டாவிலிருந்து ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -455 என்ற விமானத்தில் 18 இலங்கையர்கள் இன்று அதிகாலை 3.32 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதற்கிடையில், 294 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.10 மணிக்கு அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் 605 என்ற விமானத்தில் மத்தள விமான நிலையத்த வந்தடைந்தனர்.

இவ்வாறு விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர்.சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts