கண்டியில் நேற்று இடம்பெற்ற அனர்த்தத்திற்கு நிலநடுக்கம் காரணமாகயிருக்கலாம்- பேராசிரியர் அத்துல சேனாரட்ண

கண்டியில் நேற்று இடம்பெற்ற அனர்த்தத்திற்கு நிலநடுக்கம் காரணமாகயிருக்கலாம் என பேராதனை பல்கலைகழக பேராசிரியர் அத்துல சேனாரட்ண சிலோன் டுடேயிற்க்கு தெரிவித்துள்ளார்.
கண்டியில் முன்னர் இடம்பெற்ற நிலஅதிர்வு காரணமாகயிருக்கலாம் என அவர்தெரிவித்துள்ளார்.

இந்தபகுதியில் மண் அடுக்குபலவீனப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பேராசிரியர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கண்டியில் இடம்பெற்ற நில நடுக்கம்காரணமாகவும் சமீபத்தைய மழைகாரணமாகவும் மண்அடுக்கில் நீர் சேர்ந்துள்ளது, இதன் காரணமாக நிலம் ஸ்திரமிழந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இடிந்துவிழுந்த கட்டிடத்தை சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் கட்டும்போது இயற்கை ஆபத்துக்கள் குறித்து ஆராயாமல் கட்டியுள்ளனர் என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
மலைச்சரிவுகளில் வீடுகளை கட்டும்போது முதலில் உரிய ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையிலேயே வீடுகளை கட்டவேண்டும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

Related posts