இன்றைய வானிலை!

நாடு முழுவதும் காணப்படுகின்ற இயங்குநிலை தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் காற்று நிலைமையும்மழையுடனான வானிலையும் இன்று மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடகிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிற்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, வடகிழக்கு மற்றும் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (06N – 16N, 83E – 96E) அடுத்த சில நாட்களில் அவ்வப்போது பலமான அல்லது மிகப் பலமான காற்று வீசக்கூடுவதுடன் பலத்த மழைவீழ்ச்சியும் கொந்தளிப்பான அல்லது மிகவும் கொந்தளிப்பான கடலும் எதிர்பார்க்கப்படுகின்றது

மேற்குறிப்பிட்ட ஆழம் கூடிய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் செப்டம்பர் 22 ஆம் திகதி வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆழ்கடலில் இருப்போர் உடனடியாக பாதுகாப்பான பிரதேசத்திற்கு நகருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக   அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பிலிருந்து காலி வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்தை அண்டிய கடற்பரப்புகளில்கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை, காங்கேசந்துறை மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையானகடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவுகொந்தளிப்பாக அல்லது கொந்தளிப்பாகக் காணப்படும்.

Related posts