மூலிகை மருத்துவ முறைமைக்கு அனுமதி வழங்கிய உலக சுகாதார ஸ்தாபனம்!

ஆபிரிக்க மூலிகை மருத்துவ முறைமை பிரயோகத்தின் மூலம், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஏனைய தொற்று நோய்களுக்கான மாற்று மருந்துக்களை கண்டுபிடிப்பதற்கான சாத்தியமான பரிசோதனைகளை மேற்கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆசியா, ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் உள்ள மருத்துவ ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்படும் மூலக்கூறுகளுக்கு அமைவான முறையில் மூலிகை மருத்துவ முறைமையின் மூலம் பெறப்படும் மாற்று மருந்துகளும் சிறப்பான பலனை கொடுக்கும் தன்மையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மடகஸ்காரில் ஏற்பட்ட மலேரியா தாக்கத்தை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு ஆட்டீமிசியா என்ற வகையான செடியில் இருந்து பெறப்பட்ட சாற்றினை தொற்றாளர்களுக்கு பிரயோகித்ததில் வெற்றி காணப்பட்டது.

அதற்கு அமைய மடகஸ்கார் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மூலிகை மருத்துவ முறைமையை கொண்டு மாற்று மருந்தினை இனம்காணும் செயல்பாடுகள் தற்போது துரிதகதியில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts