பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை – புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம்!

பிரித்தானியா கொவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால்  “இப்போது இரண்டாவது அலைகளைக் காண்கிறது” எனவும் “நாட்டில் இதைப் பார்ப்பது தவிர்க்க முடியாது.” எனவும் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஜோன்சன் இறுக்கமான சமூக இடைவெளி விதிகள் அவசியமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் புதிய  மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் பொதுவெளியில் ஆறு பேருக்கு மேல் கூடத் தடை விதிக்கப்பட்டது. மேலும் பொது நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை பிரித்தானிய அரசு விதித்துள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று 385,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 41,732 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts