நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று வரை நீடிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையில் இன்று மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பங்களில் அந்த பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படுமென தெரிவித்துள்ளது.

இதேவேளை வங்காள விரிகுடாவின் ஆழமான கடற்பிராந்தியங்களுக்கு கடற்றொழிலாளர்கள் நாளை மறுதினம் வரை செல்ல வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றுவரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நுவரெலியா, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் 5.30 வரை இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மண்சரவு ஏற்படுவதற்கான முன் அறிகுறிகள் தென்படுமாயின் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு பொதுமக்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts