கண்டி – பூவெலிகட பகுதியில் 5 மாடிக் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கட்டடத்திற்குள் சிக்கியிருந்த ஒன்றரை மாத குழந்தை மீட்கப்பட்டுள்ளது. குறித்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் பல தடவைகள் அப்பகுதியில் நில அதிர்வுகள் உணரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.