இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த திட்டம்: அதிரடியாக கைது செய்யப்பட்ட ஒன்பது பேர்!

இந்தியாவின் முக்கிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அல்கொய்தா தீவிரவாதிகள் 9 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடியாக கைது செய்துள்ளது.

தேசிய புலனாய்வு அமைப்புக்‍கு கிடைத்த ரகசிய தகவலின்படி, கேரளா மாநிலம் எர்ணாகுளத்திலும், மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 9 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், கூர்மையான ஆயுதங்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், உடல் கவசம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் பாகிஸ்தானை தளமாகக் கொண்டவர்கள் என்றும், இந்தியாவின் முக்‍கிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்கள் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts