அடுத்த வருட ஏப்ரலில் அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ட்ரம்ப் அறிவிப்பு

2021 ஆம் ஆண்டு ஏப்ரலில் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மருந்து கிடைத்துவிடுமென எதிர்பார்க்கிறேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வொஷிங்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாம் குறுகிய காலத்திலேயே தகுந்த தடுப்பு மருந்தினை பெற்று கொரோனாவை வென்று விடுவோம். ஒக்டோபர் மாதத்தில் கொரோனா தடுப்பூசி மருந்திற்கான அனுமதி கிடைத்து விடும் என எதிர்பார்க்கிறேன்.

தேசிய மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள் அங்கீகரித்த 24 மணி நேரத்திலேயே கொரோனா தடுப்பு மருந்துகளின் விநியோகம் தொடங்கி விடும்.

ஒவ்வொரு மாதத்திற்கும் இலட்சக்கணக்கான கொரோனா தடுப்பூசி மருந்துகள் கிடைக்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார்.

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கி உள்ளன.

ரஷ்யா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

குறிப்பாக, அமெரிக்கா கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts