வவுனியாவில் இருந்து வெளிமாவட்ட சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கு PCR பரிசோதனை!

வவுனியா மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்ட சேவையில் ஈடுபடும் இ.போ.சபை மற்றும் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் 60 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் இன்று காலை புதிய பேருந்து நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் – 19 இன் தாக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கமும், சுகாதார துறையும் எடுத்துள்ளது.

அதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்டத்தில் இருந்து கொழும்பு, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, கண்டி, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கான சேவையில் ஈடுபடும் இ.போ.சபை மற்றும் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் 60 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னெச்சரிக்கையுடனான பாதுகாப்பிற்காகவே குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts