காலி, நியாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொரன்கல பகுதியை சேர்ந்த 46 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த நபர் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.