சீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை!

இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் பணிபுரியும் சீன நாட்டவர்களை அழைத்துச்செல்வதற்காக சீனா ஈஸ்டர்ன் விமான சேவையின் விசேட விமானம் ஒன்று நேற்று இரவு சீனாவின் ஷாங்காயி விமான நிலைத்திலிருந்து  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.00 மணிக்கு  காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திரங்கிய குறித்த விமானத்தில்  இலங்கையில் அபிவிருத்தி திட்டங்களில் பணிபுரியும் 53 சீன நாட்டவர் இலங்கை வருகை தந்ததுள்ளனர்.

அத்துடன் இதே விமானத்தில், இலங்கையில் பணிபுரியும் 206 சீன நாட்டவர் நேற்று இரவு 9.30 மணிக்கு சீனாவின் ஷாங்காய்க்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

Related posts