இலங்கையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

களு மற்றும் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களு கங்கையின் நீர்மட்டம் இரத்தினபுரி மற்றும் புலத்சிங்கள பகுதிகளில் எச்சரிக்கைக்குரிய அளவில் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ். பி.சீ. சுகீஸ்வர குறிப்பிட்டுள்ளார்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதியில் நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, மகாவலி கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

மழை வீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் சில பகுதிகளில் வௌ்ளம் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர், எஸ். பி.சீ. சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.

இதனால் ஆறுகள் மற்றும் கங்கைகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த விழிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பலத்த மழை காரணமாக  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர குறிப்பிட்டார்.

Related posts