ஸ்மார்ட் போன் வாங்க முன் கவனிக்க வேண்டிய விடயங்கள்!

ஸ்மார்ட் போன் என்பது எமது வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த எமது உடலின் அங்கமாகவே மாறிவிட்டது.

மேலும்எமதுதனிப்பட்டதகவல்கள்,தொடர்பிலக்கங்கள்,புகைப்படங்கள்,குறுஞ்செய்திகள்,வங்கி விபரங்கள்,பாஸ்வேர்ட்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் அதில் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டிய ஒரு நிலைப்பாட்டுக்குள் நாம் இருக்கிறோம்.

எமது மற்றுமொரு வாழ்க்கைத்துணையான ஸ்மார்ட் போனை நாம் தெரிவு செய்ய முன்னர் கவனிக்கவேண்டிய முக்கியமான விடயங்களை சற்றுப்பார்ப்போம்.

1. போனின் அமைப்பு

போன் உருவாக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பு அதன் வாழ்தகவை நிர்ணயிக்கின்றது. தற்போது சந்தையில் பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் தரத்திலான கட்டமைப்பே பெரும்பாலும் காணப்படுகின்றது. நீங்கள் அடிக்கடி போனை கீழே விழுத்துபவராயின் மேற்குறிப்பிட்ட இரண்டில் ஏதாவதொன்றை தெரிவு செய்யலாம்.

2.டிஸ்பிளே (Display)

போனின் அளவும் டிஸ்பிளேயும் உங்கள் தேவையையும் பாவனையையும் பொறுத்தது.

நீங்கள் அடிக்கடி வீடியோ பார்ப்பவராயின் அல்லது சமூக வலைத்தளத்தை பாவிப்பவரானால் அல்லது படங்கள் எடிட் செய்தல்,வீடியோ டவுன்லோட் செய்பவராயின் நீங்கள் 5.5 அல்லது 6 இன்ச் டிஸ்பிளேயிலுள்ள போன் வாங்குவது நன்று.

அதற்கு மேற்பட்டால் போனைக் கையாளுவது மிகக்கடினம் அத்தோடு அதை கொண்டு செல்வது சிரமமாக இருக்கும்.

3.புரோசசர் (Processor)

போனின் தொழில்நுட்பத்திறன் புரோசசரிலேயே தங்கியுள்ளது. நீங்கள் அடிக்கடி போன் பாவிப்பவராக,கேம் விளையாடுபவராக,ஒன்லைனில் அதிக நேரம் செலவளிப்பவராக இருந்தால் நீங்கள் குவால்கொம் ஸ்னாப்டிராகன் 652 அல்லது ஸ்னாப்டிராகன் 820/821 (Qualcomm Snapdragon) புரோசசர் உள்ள போன் சிறந்தது.

4.கமரா (Camera)

அதிக மெகாபிக்சல் கொண்ட கமராவால் மட்டுமே அழகான புகைப்படங்களை எடுக்கமுடியும் என்பதில்லை. அதிக மெகாபிக்சல் கொண்ட கமராவால் புகைப்படம் எடுக்கும் போது படம் பெரிதாக இருக்கும், உங்களது சிறிய ஸ்கிரீனில் பார்க்கும் அது மிகவும் ஷார்ப்பாகவும் தெளிவாகவும் இருக்கும்.

நீங்கள் ஒரு புகைப்பட விரும்பியானால் 16 அல்லது அதற்கு மேற்பட்ட கொண்ட போனை வாங்கலாம்.அல்லாவிடில் 8MP தொடக்கம் 12MP கமரா கொண்ட போன் போதுமானது. இதுவே செல்பி கமராவுக்கும் பொருந்தும்.

5. பற்றரி (Battery)

போன் பற்றரி 3000 மி.அ  இற்கு மேல் இருந்தால் சாதரணமாக நீங்கள் விரும்பியவாறு போனைப் பாவிக்கலாம்.

6. இயங்குதளம் (OS)

எப்போதும் அன்ரொய்டடின் சமீபத்திய இயங்குதளம் உள்ள போன் வாங்குவது சிறந்தது. அதன் அப்டேட்கள் உங்களுக்கு புதுவிதமானதும் பாதுகாப்பானதுமான உணர்வைக் கொடுக்கும்.

7.பாதுகாப்பு அம்சங்கள்

தற்போதைய நவீன யுகத்தில் உங்கள் போன் மிகப்பாதுகாப்பாக இருக்கவேண்டியது அவசியம்.எனவே கைரேகை மூலம் பாதுகாக்கக்கூடிய போனைத் தெரிவு செய்தல் சிறந்ததாகும். இது பலர் போனைக் கையாளுவதைக் குறைக்கும்.

8.ஸ்பீக்கர்

நீங்கள் ஏராளாமான படங்கள் பார்ப்பவர் அல்லது வீடியோ கொன்பரன்ஸில் ஈடுபடுபவராயின் போனின் முகப்பில் அமைந்திருக்கும் ஸ்பீக்கர் உள்ள போனை வாங்கலாம்.

நீங்கள் சாதரணமாக போனை பாவிப்பவராயின் போனின் கீழ்ப்பகுதியில் ஸ்பீக்கர் கொண்டுள்ள போனை வாங்கலாம்.

9.சிம்கார்ட் ஸ்லொட்

நாம் இருக்கக்கூடிய இந் நானோ தொழில்நுட்பக்காலத்தில் நாம் பாவிக்கக்கூடிய அனைத்து சிம்கார்ட்களும் நானோ சிம் (Nano Sim) ஆகவே காணப்படுகின்றன. எனவே நானோ சிம் பாவிக்கக்கூடிய போனை தெரிவு செய்தல் சிறப்பானதாகவிருக்கும்.

Related posts