எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதார ஸ்தாபனம்!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம், இதன் காரணமாக பலியாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கில், மட்டுப்படுத்தப்பட்ட வரையறைகளைக் கொண்ட நிபந்தனைகளை அமுல் படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தற்போது பாரதூரமான நிலையில் உள்ளதாக தெரிவித்த பிரித்தானிய சுகாதாரத்துறை செயலர் மற் ஹன்கொக் முழு அளவிலான முடக்கம் ஒன்றை அமுல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரிப்பதன் காரணமாக மாற்று கடுமையான நிபந்தனைகளை அறிமுகப்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் நாடு தழுவிய இரண்டாவது முடக்க நிலையை முதன் முதலாக அமுல்படுத்த தீர்மானித்துள்ளது.

இதற்க அமைய வீடுகளையும் அதனை சூழவுள்ள பிரதேசத்தையும் தவிர்ந்த இடங்களுக்கு நடமாட மக்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 24 ஆயிரம் பிரஜைகள் தாயகம் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.

தற்போது, அவுஸ்திரேலிய அரசாங்கம் வாரா வாரம் 6 ஆயிரம் அவுஸ்திரேலியர்களை தற்போது உள்வாங்க தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், இன்றைய நிலையில், சர்வதேச ரீதியாக 3 கோடி மக்கள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் 9 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மரணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts