ஊழியர்களுக்கு கொரோனா! ஜித்தா நகரிலுள்ள இலங்கை உதவித் தூதர் அலுவலம் பூட்டு

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரிலுள்ள இலங்கை உதவித் தூதர் அலுவலகத்தின் ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதன் காரணமாக அந்த அலுவலகம் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி தூதரகம் மீண்டும் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றினால் பீடிக்கப்பட்ட அலுவலக ஊழியர் அங்கு கடந்த 25 வருடங்களாக வேலைசெய்து வரும் மொழிபெயர்ப்பாளர் என்று தெரிய வருகிறது.

அதேநேரம் மேற்படி அலுவலகத்திலிருந்து கடந்தவாரம் விலகிச் சென்ற ஒருவர் இலங்கைக்கு சென்றபோது அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்தே சவூதி அரேபியாவின் ஜித்தா நகரிலுள்ள இலங்கை உதவித் தூதர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

Related posts