அமெரிக்காவில் டிக்டொக் (TikTok), வீசாட் (We Chat) தரவிறக்கத்துக்கு 48 மணித்தியாலங்களுக்குள் தடை விதிக்கத் திட்டம்!

அமெரிக்காவில் டிக்டொக் மற்றும் வீசாட் செயலிகளுக்கு 48 மணித்தியாலங்களுக்குள் தடை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு வர்த்தகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இறுதிநேர உடன்பாடொன்றுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இணங்கினால் தவிர, இத்தடை அமுலுக்கு வரும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

டிக்டொக் மற்றும் வீசாட் செயலிகளுக்கு உரிமையாளர்களான சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன எனவும், தரவுகளை சீன அரசுக்கு அவை வழங்குவதாகவும் ட்ரம்ப் நிர்வாகம் குற்றம் சுமத்துகிறது. ஆனால், இந்நிறுவனங்களும் சீன அரசும் இதை மறுக்கின்றன.

இந்நிலையில் ஞாயிறு முதல் அமெரிக்காவில் டிக்டொக் மற்றும் வீசாட் செயலிகள் தரவிறக்கம் செய்வது தடை செய்யப்படும்.

வீசாட் பயன்படுத்தல் ஞாயிறு முதல் தடுக்கப்பபடும் ஆனால். டிக்டொக்கை நவம்பர் 12 ஆம் திகதி வரை பயன்படுத்த முடியும்.

டிக்டொக்கை வாங்குவது தொடர்பாக அதன் உரிமையாளர்களான பைட்டான்ஸ் நிறுவனத்துக்கும் அமெரிக்காவின் ஒராக்கள் நிறுவனத்துக்கும் இடையிலான பங்குடைமைக்கு ஜனாதிபதி ட்ரம்ப் இறுதி நேரத்தில் அனுமதி அளித்ததால் டிக்டொக்கிற்கு தடை விதிக்கப்பட மாட்டாது. ஆனால், ஜனாதிபதி ட்ரம்ப் அதற்கு அங்கீகாரம் அளிப்பாரா என்பது தெரியவில்லை.

Related posts