மத்தள விமான நிலையத்தினூடாக வெளிநாடு செல்வோருக்கு சிறப்பு சலுகை!

எதிர்காலத்தில் மத்தள சர்வதேச விமான நிலையத்தினூடாக வேலைவாய்ப்பு நிமித்தம் செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பணியகத்தின் தகவல்களின்படி, ஆண்டுதோறும் 200,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைக்குச் செல்கின்றனர்.

தொழில்வாய்ப்புகளுக்காக இவ்வாறு வெளிநாடு செல்வோரில் 20 சதவீதமானோர் பேர் மத்தள விமான நிலையத்‍தை அண்மித்த காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மொனராகலை, பதுளை, அம்பாறை, இரத்தினபுரி,மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

விமான சேவைகளின் இயல்புநிலை திரும்பும்போது இந்த தீர்மானம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் ரணதுங்க சுட்டிக்காட்டினார்.

Related posts