போலி விசா மூலம் வௌிநாடு செல்ல முற்பட்ட 13 பேர் கைது!

போலி விசாவை பயன்படுத்தி நாட்டிலிருந்து கனடாவுக்கு செல்ல முயற்சித்த 13 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கட்டார் ஊடாக கனடாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts