தனிமைப்படுத்தலில் இருந்து 608 பேர் இன்று வீடு திரும்புகின்றனர்

கொவிட்-19  வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மேலும் 608 பேர் இன்று (17) தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

இதுவரை  41861 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவுசெய்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முப்படையினரால் நடத்திச்செல்லப்படும் 59 தனிமைப்படுத்தல் முகாம்களில் மேலும் 6270 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஓமானில் இருந்து 280 பேர் நேற்று (16) இரவு நாட்டை வந்தடைந்தனர். கட்டாரில் இருந்து 35 பேர் இன்று (17) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

PCR பரிசோதனைகளின் பின்னர் இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

Related posts