அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தும் அதிபர் சங்கம்!

வேதன பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தினால் இதுவரை தீர்வொன்றினை வழங்கமுடியாமல் போயுள்ளதாக இலங்கை அதிபர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை அதிபர் சங்கத்தின் செயலாளர் பியசிரி பெர்னாண்டோ புத்தளத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

குறித்த வேதன பிரச்சினைகளின் தீர்விற்காக தொழிற்சங்கங்களுக்கு இதுவரை கலந்துரையாட சந்தர்ப்பம் அளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts