விமான நிலையம் திறக்கப்படுவது தொடர்பில் வெளியான தகவல்!

சுகாதார பரிந்துரைகளுக்கு அமையவே நாட்டில் உள்ள விமான நிலையங்கள் திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக வருபவர்களை தடுப்பதற்காக கடற்படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் இதுவரை 2 லட்சத்து 57 ஆயிரத்து 477 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் முப்படையினரால் நடத்தி செல்லப்படும் 59 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6 ஆயிரத்து 255 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை 41 ஆயிரத்து 792 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அத்துடன் இன்று கட்டாரில் இருந்து 24 பேரும் சென்னை மற்றும் மும்பையில் இருந்து சிலரும் நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts