நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் மற்றும் நினைவேந்தல் வளைவுகள் பொலிஸாரால் இரவோடு இரவாக அகற்றப்பட்டன.
தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் நேற்று (15) ஆரம்பமாகின்றது.
இந்த நிலையில் நீதிமன்றத் தடையை நேற்றுப் பெற்றிருந்த யாழ்ப்பாணம் பொலிஸார், இரவோடு இரவாக நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப் படம் உள்ளிட்ட நினைவேந்தல் வளைவுகளை அகற்றியுள்ளனர்.