குடியரசாக பிரகடனம் செய்யவுள்ள பார்படோஸ்!

பார்படோஸ் அடுத்த வருடம் குடியரசு நாடாகப் பிரகடனம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் அரச தலைவர் பதவியிலிருந்தும் இரண்டாம் எலிசபெத் மகாராணி விலகவுள்ளதாகவும் பார்படோஸ் அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் சுமார் மூன்று தசாப்தங்கள் பிரித்தானிய முடியாட்சியின் கீழிலிருந்து விடுதலை பெறும் நாடாக தற்போது பார்படோஸ் உள்ளது.

‘காலனித்துவ ஆட்சியிலிருந்து முழுமையாக விடுதலை பெறும் நேரம் வந்து விட்டது’ என கரீபியன் நாட்டின் ஆளுனர் நாயகம் செவ்வாயன்று ஆற்றிய உரையொன்றில் கூறியுள்ளார்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து சுதந்திரம் பெற்று 55 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பார்படோஸ் குடியரசாக மாறும் என்று ஆளுனர் ஜெனரல் சாண்ட்ரா மேசன் மேலும் கூறினார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணி ஐக்கிய இராஜ்ஜியம் உட்பட முன்னர் பிரிட்டிஸ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த 15 நாடுகளின் தலைவராக தற்போதும் உள்ளார்.

அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, ஜமேக்கா, கரீபியன் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள பல தீவு நாடுகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

எனினும் பார்படோஸ் மக்கள் அவரது அந்தஸ்தை நீக்க நீண்டகாலமாக கிளர்ந்தெழுந்தனர் – அதனுடன், அதன் ஆளுகை மீது ஏகாதிபத்தியத்தின் நீடித்த அடையாளமாக அவர் உள்ளார் என்றும் கூறி வந்ததுடன் இந்த நூற்றாண்டில் பல்வேறு தலைவர்கள் நாடு ஒரு குடியரசாக மாற வேண்டும் என்று முன்மொழிந்தனர்.

அத்துடன் பார்படோஸ் மக்கள் ஒரு பார்பேடிய நாட்டுத் தலைவரை விரும்புகிறார்கள், இதன் மூலம் தமது அடையாளம் வெளிப்படுத்தப்படும்.

மேலும் பார்படோஸ் முழு இறையாண்மையை நோக்கி நகரவுள்ளது. அந்த வகையில் பார்படோஸ் 55 ஆவது சுதந்திர ஆண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில் குடியரசாக மாறும் என்றும் ஜெனரல் சாண்ட்ரா மேசன் கூறியுள்ளார்.

பார்படோஸ் கரீபியக்கடலுக்கு கிழக்குத்திசையில் அந்திலாந்திக் மாக்கடலில் அமைந்துள்ள ஒரு தீவாகும்.

Related posts