கடந்த காலங்களில் கொரோனா தொற்றுக்கள் அதிகரித்த வண்ணமேயுள்ளன அந்தவகையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 28 பேர் நேற்று (14) அடையாளம் காணப்பட்டனர்.
பங்களாதேஷிலிருந்து வருகை தந்த நால்வர், வியட்நாமிலிருந்து வருகை தந்த ஒருவர், கத்தாரிலிருந்து வருகை தந்த ஒருவர், பஹ்ரைனிலிருந்து வருகை தந்த கடற்படையினர் நால்வர், இந்திய கடற்படையின் ஐவர், குவைத்திலிருந்து வருகை தந்த ஒருவர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த 11 பேர் உள்ளிட்ட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,262 ஆக அதிகரித்துள்ளது.