தொழில் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஊழியர் குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய கோரிக்கை!

கொரோனா தொற்று காரணமாக தொழில் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஊழியர் குறைப்பு தொடர்பில் ஒருவாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழில் ஆணையாளர் நாயகத்திடம் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

தொழிலாளர் நலன்புரி சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். தொழிலாளர் நலன்புரி சங்கம் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவை நேற்று சந்தித்து கலந்துரையாடி இருக்கின்றது.

இதன்போது அவர்கள், தொழில் நிறுவனங்களில் ஊழியர் குறைப்பு எக்காரணம் கொண்டும் மேற்கொள்ளமாட்டோம் என முதலாளிமார்களுடன் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர். இருந்தபோதும் பல்வேறு நிறுவனங்களில் முதலாளிமார் நினைத்த பிரகாரம் ஊழியர்களை வெளியேற்றி இருக்கின்றனர்.

அத்துடன் இது தொடர்பாக எமது சங்கம் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு தெரிவித்திருந்த போதும் இதுவரை அதுதொடர்பில்  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அமைச்சரிடம் சுற்றிக்காட்டியிருந்தனர்.

இதற்கமைவாகவே, கொரோனா தொற்று காரணமாக தொழில் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஊழியர் குறைப்பு தொடர்பில் ஒருவாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழில் ஆணையாளர் நாயகம் எச். விமலவீரவுக்கு அமைச்சர் உத்திரவிட்டுள்ளார்.

Related posts