எம்.கே.சிவாஜிலிங்கம் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே சிவாஜிலிங்கம் சற்றுமுன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி திலிபனுக்கு அஞ்சலி செலுத்திய போது கோண்டாவில் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும், நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப் படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள், பொலிசாரினால் அகற்றப்பட்டுள்ளன. திலிபனின் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் தடையுத்தரவினை பிறப்பித்தது.

இந்த தடையுத்தரவுக்கு அமைய குறித்த உருவப்படம், நினைவேந்தல் பதாதைகள் பொலிசாரினால்  அகற்றப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளர்.

Related posts