உங்கள் மொபைல் போன் இன்டர்நெட் வேகத்தை அதிகரிப்பது எப்படி?
மொபைல் போனில் இன்டர்நெட் பாவிப்பவர்களுக்கு அதன் வேகம் குறைவாக இருப்பதே முக்கிய குறைபாடாக உள்ளது. 4G கிடைக்கக்கூடிய பிரதேசமாக இருந்தால் கூட இந்த சிக்கல் தொடர்ந்து காணப்படுகின்றது. இந்த இடர்பாட்டை எவ்வாறு தவிர்ப்பது பற்றி இங்கு தெளிவுபடுத்தப்படுகிறது. தொழில்நுட்பம் பற்றிய விடயங்களை ஆராயும் தொடரின் முதல் பதிவாக இதனை உங்களுடன்பகிர்ந்துகொள்கின்றோம்.
இங்கு மொபைல் போன் இன்டர்நெட் வேகத்தை அதிகரிப்பது பற்றிய 5 முக்கிய உத்திகள் தரப்படுகின்றன. இவற்றை சரியான முறையில் பின்பற்றும்போது உங்கள் மொபைல் மூலம் வேகமான இணைய அனுபவத்தைப்பெறமுடியும்.
1. உங்கள் வீட்டில் நெட்வேர்க் கவரேஜ் உள்ள இடத்தை கண்டுபிடித்தல்
கவரேஜ் தொடர்பாக உங்கள் பிரதேசத்தில் பிரச்சினை இருந்தால் இந்த நடைமுறையை பின்பற்றுங்கள். முதலில் போன் Settings க்குள் About Phone எனும் பகுதியில் உள்ள Sim Status ஐ அழுத்தவும். பின்னர் அதில் Signal Strength எனும் பகுதி காணப்படும். அங்கு உள்ள இலக்கம் -105 ஐ விட குறைவாக (உதாரணமாக -105,-110,-115……… இவ்வாறாக இருத்தல்) இருக்குமிடத்து அங்கு சிக்னல் குறைவாக இருக்கிறது என அர்த்தம்.